ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

💲🔵💲ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

💲🔵💲பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது.

💲🔵💲மின்சார கார்களின் விலை குறைகிறது.

💲🔵💲🔵💲🔵ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது

💲🔵💲🔵மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

💲🔵💲அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது.
SGTA-GROUP
💲🔵💲அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் வரை மதிப்பிலான வீடு வாங்குபவர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1½ லட்சம் கழித்துக்கொள்ளலாம்.

💲🔵💲தற்போது இந்த சலுகை ரூ.2 லட்சமாக உள்ளது.

💲🔵💲🔵💲கூடுதல் வரி

💲🔵💲நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி விகிதங்களில், அடுக்குகளில் மாற்றம் இல்லை என அறிவித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கூடுதலாக வருமானம் சம்பாதிப்பவர்கள் கூடுதலாக வரி பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.

💲🔵💲அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ள தனி நபர்கள் 3 சதவீதம் கூடுதல் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்கள் 7 சதவீதம் கூடுதல் வரியும் செலுத்த வேண்டும்.

💲🔵💲வருமான வரி கணக்கு தாக்கலுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாத பட்சத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Design a site like this with WordPress.com
Get started