அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.

5% அகவிலைப் படி உயருமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது. தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது. அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கானContinueContinue reading “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.”

நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்

,👩‍🏫பள்ளிக்கு செல்ல வழி இல்லாததால் நடுரோட்டிலேயே மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே கடந்த 50 ஆண்டுகளாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. 👩‍🏫பள்ளிக்கு செல்லும் வழியில் பலர் பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தனியார் பட்டா நிலத்தின் வழியாக தான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். 👩‍🏫இந்த நிலையில் இன்று காலைContinueContinue reading “நடு ரோட்டில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்”

அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை

💳அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாணவர்களை எளிதாக கண்டறிவதற்காக தனியார் பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் கார்டு என்றும் மின்னணு முறையில் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகின்றது. 💳தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் அடையாள அட்டைகளில் கூட பெயர் மற்றும் பள்ளியின் விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும். 💳ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால்ContinueContinue reading “அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை”

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டContinueContinue reading “கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு”

🅱️REAKING NEWS* ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து: அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திருப்பி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு தற்போது ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திருப்பி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 22,314 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.67 லட்சத்தை திருப்பி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.*

Flash News : DSE – Best Science Teachers Award 2019 – 20 | Applying Forms And Instructions Published ( Sciencecitychennai.in)

சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 2019 – 20க்கான விருது – விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு. விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக 15.09.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணை இயக்குநர் ( தொழில் கல்வி) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். applying click here download

8462 Posts RMSA BC Head Pay order for July.

Pay Authorization for the month of July 2019 1590 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஜூலை 2019 மாதத்திற்கான சம்பள வழங்க ஊதிய கொடுப்பாணை வெளியீடு. click here download pdf

பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை ஜூலை 25 ஆம் தேதி துவங்கி 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 345 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு டேட்டா பலன்களும், மொத்தம் 1200 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

10,12ம் வகுப்புகளில் மாணவர்கள் விருப்ப பாடத்தை மாற்ற முடியாது

பத்து, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் விருப்பப் பாடத்தை இனிமேல் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’ என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விதிப்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகள் 2 ஆண்டு படிப்புகளாகும். இந்த வகுப்புகளில் சேரும் மாணவர்கள் முறையே 9 மற்றும் 11ம் வகுப்புகளில் விருப்ப பாடங்களை தேர்வு செய்து அதையே அதற்கு அடுத்த 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தொடர வேண்டும். ஆனால், சில மாணவர்கள் 10 அல்லது 12ம்ContinueContinue reading “10,12ம் வகுப்புகளில் மாணவர்கள் விருப்ப பாடத்தை மாற்ற முடியாது”

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல்

💲நல்லாசிரியர் விருது வழங்கும் புதியவிதிமுறை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 💲இதனால், யாரை விருதுக்கு தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. 💲இந்நிலையில், இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறைContinueContinue reading “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல்”

பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,627 கோடி நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு திட்ட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ1,627 கோடியை செலவிடாமல் பள்ளிக் கல்வித்துறை திருப்பி அனுப்பியதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகவும் பல்வேறு பணிகளுக்காகவும் அனுமதிக்கப்பட்ட மானியங்கள், ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த துறைகள் முறையாக செலவிட்டுள்ளனவா என்று சரிபார்க்க இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைதுறையின் சார்பில் மாநில நிதிநிலை மீதான தணிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிந்தContinueContinue reading “பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,627 கோடி நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை”

Emis updates

Emis update: மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு விவரங்கள் Emis வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் நாமே பார்த்துக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும் Time table பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது Teacher attendance module is now available in the School login of EMIS. (Staff Menu – Staff Attendance) It is enough to update the attendance in one – the web module or through the app.*ContinueContinue reading “Emis updates”

பற்றாக்குறையாக உள்ள 2,400 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

💲தமிழகத்தில், 2,400 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.வேலுார், சத்துவாச்சாரியில், அவர் அளித்த பேட்டி:* தமிழகத்தில், 1,248 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது, தவறு. ஒரு மாணவர் கூட இல்லாத, 45 பள்ளிகளை, தற்காலிக நுாலகமாக மாற்றவும், அந்த பள்ளி ஆசிரியர்களை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதும், அந்த பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை மூலம், மாணவ – மாணவியருக்கு காலணி வழங்கும் திட்டத்தை மாற்றிContinueContinue reading “பற்றாக்குறையாக உள்ள 2,400 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்”

சமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்

கல்விக்கடனைத் திருப்ப செலுத்தாதவர்களை அவர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கிகள் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது. வங்கிகளில் கல்விக் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் ஒரு புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி வங்கி அதிகாரிகள் ‘டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்’ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தளத்தின் உதவியுடன் வங்கி கடனை செலுத்தாதவரின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அவரின் வேலை விவரம் ஆகியவை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அதன்பின்னர் இந்தக் கணக்கைContinueContinue reading “சமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்”

யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்

‘டிக்கெட் ரத்து செய்யும் பயணியர், முன்பதிவு, வங்கி கணக்கு விபரங்களை, சமூக வலைதளங்களிலும், தனி நபரிடமும் பகிர வேண்டாம்’ என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தியுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணிக்கின்றனர். ‘இ – டிக்கெட்’ ரத்து செய்யப்படும் பட்சத்தில், செலுத்திய கட்டணம், பயணியின் வங்கிக் கணக்கில், தானாக செலுத்தப்படும். ரத்து கட்டணத்தை திரும்ப பெற, வங்கிக் கணக்கு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை டிக்கெட்ContinueContinue reading “யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்”

வேலையில் மந்தமா? உடனே விஆர்எஸ்: 55 வயதுக்கு மேல் உள்ள அதிகாரிகள் பட்டியல் தயாரிக்க உத்தரவு

சரியாக வேலை செய்யாத, வயது முதிர்ந்த ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கும் வகையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் அல்லது 30 ஆண்டு பணியை நிறைவு செய்தவர்கள் பட்டியலை தயார் செய்யும்படி மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே ஓய்வளிப்பதற்காக அரசுத் துறைகளில் பணியாற்றும் 1.9 லட்சம் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் செயல்பாடுகள் 2014 முதல் 2019 வரை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மக்களவையில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ரயில்வேயில் தற்போது 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2020ம் ஆண்டுக்குள்ContinueContinue reading “வேலையில் மந்தமா? உடனே விஆர்எஸ்: 55 வயதுக்கு மேல் உள்ள அதிகாரிகள் பட்டியல் தயாரிக்க உத்தரவு”

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுப்பணியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதாக புகார்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுப்பணியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. வேலுார் இடைத்தேர்தல் நடத்தை விதியால் 2019 -20 ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு காலாண்டு தேர்வுக்கு பின் நடக்க உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பிளஸ் 1, 2 மாணவர்களுக்குContinueContinue reading “முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுப்பணியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதாக புகார்”

மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்தால் ஆவணங்களுடன் அறிக்கை அனுப்ப வேண்டும்

மாணவர்களின் வருகைப் பதிவு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்கள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2019-ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பள்ளிக்கு குறைவாக வருகை தந்த மாணவ, மாணவிகளே சிபிஎஸ்இ தேர்வுகளில் மோசமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே பள்ளிக்கு குறைவாக வருகை தரும் மாணவர்களைச் சமாளிக்க, நிலையான செயல்பாட்டு விதிமுறைகள்ContinueContinue reading “மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்தால் ஆவணங்களுடன் அறிக்கை அனுப்ப வேண்டும்”

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நாளைய கலாம்’ விருது

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில், ‘‘நாளைய கலாம்’’ விருது வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 2 பள்ளி மாணவர்களுக்கு, ‘‘நாளைய கலாம்’’ விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அங்கம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்ContinueContinue reading “அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நாளைய கலாம்’ விருது”

ஆகஸ்ட் 11ம் தேதி மத்திய டெட் தேர்வு முடிவு

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 11 ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 20 லட்சத்து 84 ஆயிரத்து 174 பேர் எழுதினர். நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்த தேர்வு நடந்ததுContinueContinue reading “ஆகஸ்ட் 11ம் தேதி மத்திய டெட் தேர்வு முடிவு”

தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்தில் முதல், 3-வது சனிக்கிழமைகளில் புத்தகப்பையைபள்ளிக்குக் கொண்டுவரத் தேவையில்லை

💲🔘ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்தில் முதல், 3-வது சனிக்கிழமைகளில் புத்தகப்பையைபள்ளிக்குக் கொண்டுவரத் தேவையில்லை என்று ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாகஅமலுக்கு வந்தது.* *💲🔘இந்த உத்தரவின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளும் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளைப் புத்தகப் பை கொண்டுவர கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.* *💲🔘இந்த அறிவிப்பை உடனடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு, குழந்தைகளின் பெற்றோருக்கும் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றுContinueContinue reading “தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்தில் முதல், 3-வது சனிக்கிழமைகளில் புத்தகப்பையைபள்ளிக்குக் கொண்டுவரத் தேவையில்லை”

13 ஆசியர்களுக்கு நோட்டீஸ்

தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்று பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக 13 நூல் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பாடப்புத்தகத்தில் தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக, 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களில் பல்வேறு பிழைகள் மற்றும் தேசிய கீதத்தை தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில்,ContinueContinue reading “13 ஆசியர்களுக்கு நோட்டீஸ்”

Flash News : அரசு பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நூலகம் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை. ஒவ்வொரு நூலகத்திலும் 1,000 புத்தகங்கள் இருக்கவேண்டும் என உத்தரவு

Design a site like this with WordPress.com
Get started