ஓய்வு பெறும் ஆசிரியருக்கு ஊதிய பலன் ஆணை வழங்க மகளுக்கு பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் கல்வி அலுவலர்: வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ

💲💲ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் ஓய்வு பெறும் ஆசிரியரிடம் ஊதிய பலன் ஆணை  வழங்குவதற்காக தனது கடனை தீர்க்க, அல்லது மகளின் ஸ்கூல் பீஸ் கட்ட லஞ்சம் கேட்கும் வட்டார கல்வி அலுவலரின் ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

💲💲 தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில்  பல்வேறு அரசு நிதியுதவியுடன் கூடிய சிறுபான்மையினர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள இந்த சிறுபான்மையினர் பள்ளிகள் மாதனூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.இதில் ஆம்பூரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியின் ஆசிரியர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு ஊதிய பலன்களுக்காக விண்ணப்பித்திருந்தார்.

💲💲தற்போது இதற்கான ஆணை வழங்க மாநில கணக்கு அலுவலகத்தில் இருந்து மாதனூர்  வட்டார கல்வி அலுவலராக பணிபுரியும் மாதேஷ்க்கு தகவல் வந்துள்ளது.AdvertisingAdvertisingஇந்நிலையில், வட்டார கல்வி அலுவலர் மாதேஷ், அந்த பள்ளியின்  தலைமையாசிரியரை போனில்  தொடர்பு கொண்டு ஓய்வு நிதி வழங்க அந்த ஆசிரியரின் ஓய்வூதிய பலனில் இருந்து தனக்கு உள்ள ஒரு கடனை தீர்க்கவோ அல்லது தனது மகளின் கல்வி கட்டணத்தை செலுத்தவோ பணம் கேட்கும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது

Design a site like this with WordPress.com
Get started