பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
💲💲💲பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, புதன்கிழமை (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
💲💲கடந்த ஜூன் மாதம், பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தத்கல் தனித்தேர்வர்கள் உள்பட), தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, புதன்கிழமை (ஜூலை 10) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
💲💲http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள provisional mark sheet – HSE second year result – june 2019 என்ற வாசகத்தில் click செய்து, தனித் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
💲💲இதேபோல், ஜூன் 2019, தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஜூலை 11,12 ஆகிய தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் (விடைத்தாள் நகல் (ஒவ்வொரு பாடத்துக்கும்) -ரூ.275, மறுகூட்டல் (உயிரியல் பாடத்துக்கு – ரூ.305) (ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205) செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
💲💲விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள விண்ணப்ப எண்ணை (application number) பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் மற்றும் மறுகூட்டல் பற்றி அறிய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
