பி.எட். கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

🔘💲🔘💲🔘💲இரண்டு ஆண்டுகள் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

🔘💲🔘💲🔘💲🔘சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் இந்தக் கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது.

🔘💲🔘💲🔘தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 2,040 பி.எட்.படிப்பு இடங்களில் 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாக உள்ளது.

💲🔘💲🔘அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.
ஜூலை 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 29 கடைசி நாளாகும்.

💲🔘🔘விண்ணப்பக் கட்டணத்தைப் பொருத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ. 500 என்ற அளவிலும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விவரங்களை http://www.ladywillingdon.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்

Design a site like this with WordPress.com
Get started