தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

💲🔘💲🔘💲நெல்லையில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தென்காசி மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டசபையில் தென்காசியை தனி மாவட்டமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசிஉதயமாக உள்ளது*
*தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

💲🔘💲இதே போல் சட்டசபையில் 110 வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என கூறினார். நெல்லையில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும். காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்து புதுமாவட்டமாக உருவாக்கப்படும் என கூறினார்.

💲🔘💲இதை தொடர்ந்து தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது

Design a site like this with WordPress.com
Get started