தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்தன

📩மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள்‌‌ வந்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

📩இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், கடந்த 15ஆ‌ம் தேதி வரை பொதுமக்கள் உள்ளிட்ட பல்‌வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் பரிந்துரைகள் மத்திய அரசு‌க்கு வந்துள்ளதாக‌க் கூறியுள்ளார். தமிழ் மொழியிலும் ஏராளமான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருப்ப‌தாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

📩தனி‌ நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் உ‌ள்ளிட்ட வெவ்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளின் விளைவாக,‌ பரிந்துரைகளை அளிப்பதற்கான அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தனது பதலி‌ல் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சுட்‌டிக்காட்டியுள்ளார்.

Design a site like this with WordPress.com
Get started