30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!

1) தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி நோட்டு தினசரி எழுதி தேதியுடன் திருத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
2) சொல்வதை எழுதுதல் பயிற்சி அந்தெந்த வகுப்புக்கு ஏற்றவாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதி திருத்தம் செய்யப்பட வேண்டும்.
3) பருவத்தேர்வு மாதங்களில் மொழி படத்திற்கு 1 கட்டுரை யும் மற்ற மாதங்களில் 2 கட்டுரைகளும் எழுத்தப்பட்டு திருத்தம் செய்ய பட வேண்டும்.
4) அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும்.
5)News reader role model லில் அனைத்து மாணவர்களும் பங்கு பெற செய்ய வேண்டும்.
6) 1-8 வகுப்புக்கு ஆசிரியர் பாடக்குறிப்பேடு எழுதப்பட வேண்டும்.
7) எல்லா வகுப்புக்களுக்கும் பாட நோட்டு எழுதப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும்.
8) FA(a),FA(b) மற்றும் CCE பதிவேடுகள் பராமரிக்கபட வேண்டும்.
9) ஒவ்வொரு வகுப்பறையிலும் கால அட்டவணை பின்பற்றி பதிவேடு பேணப்பட வேண்டும்.
10) தரைமட்ட கரும்பலகையில் வண்ண சுண்ணக்கட்டி கொண்டு எழுத பயிற்சி கொடுக்க பட வேண்டும்.
Design a site like this with WordPress.com
Get started