பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு

தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, தலைமையாசிரியர்கள், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஜூன் முதல், ‘பயோமெட்ரிக்’ முறையில், ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது.

காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வர உத்தரவிட்டிருந்தாலும், பல ஆசிரியர்கள் தாமதமாக வருவது குறித்து, நேற்று முன்தினம், ‘காலைக்கதிர்’ நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ‘பயோமெட்ரிக்’ முறை, ஜூன், 1 முதல், நடைமுறையில் உள்ளது

அதில், பல தலைமையாசிரியர்கள், தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பணியை சரிவர செய்யாமல் இருப்பது வருந்தத்தக்கது.

தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, தலைமையாசிரியர்கள், உடனடியாக பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started