7ம் தேதி துவங்குது பி.எட்., கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 7ம் தேதி துவங்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் வழியாக நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லுாரியில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரத்திற்கு முன் முடிந்தது. வரும், 7ம் தேதி கவுன்சிலிங் துவங்கும்.

விண்ணப்பதாரர்களின், ‘கட் – ஆப்’ மதிப்பெண் அடிப்படையில், வரும், 13ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், விபரங்களை, http://www.ladywillingdon.com என்ற, இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Design a site like this with WordPress.com
Get started