நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை.
இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி கள் செயல்பட்டு வருகின்றன.
இவற் றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது.
இவ்வாறு ரூ.1 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல் படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத் துவதற்கான பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.
இதனால், கணினி படிப்பை படிக்க முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவி கள் தவிக்கின்றனர். இதுதொடர் பாக, ஆசிரியர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
கணினிகள் இல்லாத காரணத் தால் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்த மாணவர்கள் கூட புத்தகத்தில் இருப்பதை மனப் பாடம் செய்துதான் தேர்வை எழுதி வருகின்றனர்.
ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரி யர்கள் தங்களது சொந்த பணத் தில் ஆட்களை நியமித்து மாணவர் களுக்கு பாடம் நடத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கணினிகள் வந்தன. இருப்பினும் அவை அட்டை பெட்டிக்குள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரி களின் அலட்சியத்தால் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கணினி பாடம் நடத்த முடிய வில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சிறப்பு பள்ளிகளுக்கு கணினிகளை அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதி காரணமாக கணினிகளை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதனால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. கணினி தொழிற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்காததால் அரசுக்கு பணம் திரும்பிச் சென்றது உண்மைதான்.
இருப்பினும், ஆசிரியர்களை நியமிக்கும் போது அரசிடம் இருந்து பணம் பெறு வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. விரைவில் கணினி ஆய்வகம் நடைமுறைக்கு கொண்டு வரப் படும்” என்றார்.
