பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்*

💲♦💲♦💲பாடப் புத்தகத்தில் வெளிவந்த
பிழைக்கு சம்பந்தப்பட்ட
ஆசிரியர்கள்தான்
பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.*

*💲♦💲ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:*
*கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.*

*💲♦💲மேலும் 2 துணை மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடிவேரி அணை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி குற்றாலத்தைப் போல் கொடிவேரியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.*

*இதுவரை 45.72 லட்சம் மடிக்கனிணிகள் வழங்கப்பட்டுள்ளன.*

*💲♦💲விரைவில் கல்வி சேனல் தொடங்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை*

*💲♦💲கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 2 மாத காலத்தில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும். பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.*

*இதில் அதிகாரிகள் மீது எப்படி குறை சொல்ல முடியும்? இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.*

*💲♦💲புதிய கல்விக் கொள்கையை பொருத்தவரை தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் தொடர வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.*

*தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் தொடரும் என்றார்.*

Design a site like this with WordPress.com
Get started