வளரிளம் மாணவர்களை வகுப்பறையில் எவ்வாறு கையாள்வது என 3,500 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வளரிளம் மாணவர்களை எவ்வாறு வகுப்பறைகளில் கையாள்வது, மன நலம், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் கருதினார்.
3,500 ஆசிரியர்களுக்கும் மனநலம் குறித்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 100 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள். இப் பயிற்சி டிச. 12 ம்தேதிவரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனை மனநல டாக்டர் ராஜேஷ் பயிற்சி அளித் தார். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், உதவி திட்ட அலுவலர் சிவானந்தம் செய்தனர்.
