தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து, கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட அறிக்கை:பால் சக்தி புரஸ்கார், பால் கல்யாண் புரஸ்கார் என்ற பெயர்களில், தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது.

பால் சக்தி புரஸ்கார் விருது, விளையாட்டு, கலை, வீரம், கலாசாரம், சமூக சேவை, கல்வியியல் போன்ற துறைகளில், தங்களது தனித்துவம் மிக்க செயலாற்றலால் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

பால் கல்யாண் புரஸ்கார் விருது, குழந்தைகள் முன்னேற்றம், பாதுகாப்பு நல்வாழ்வு போன்ற துறைகளில் சிறந்த பங்களித்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் தனி நபர் பிரிவில், ரூ.1 லட்சம் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனம் பிரிவில், ரூ.5 லட்சம் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

விருதுக்கான விண்ணப்பங்கள்,
http://www.nca-wcd.nic.in
என்ற இணையதளத்தில் வரும் 31 வரை பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்

Design a site like this with WordPress.com
Get started