தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபி அருகே ஏளூரில் துணை மின் நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்*
*♦💲♦இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி*
*♦💲♦தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, சிறப்பு தேர்விற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் கவுன்சலிங் நடத்தப்படும்
*♦💲♦தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிக்கும் பேராசிரியர் தேர்வு நடத்தப்படும்*
*♦💲♦மேலும் ஆன்லைன் மூலமாக எந்த தவறும் நடைபெறாத வகையில் ஆசிரியர் பணி தேர்வு நடக்கும்*
*♦💲♦கணினி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு இந்த வார இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர்*
*♦💲♦தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லாததால், கடந்த 2012-13ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க இயலாத நிலை உள்ளது. 16,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்தது*
*♦💲♦இந்த ஆண்டுதான் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி நிரப்பப்படும்*
*♦💲♦ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் கொடியேற்ற மட்டுமே அனுமதி. வகுப்புகள் நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்*
