பள்ளிகளில் சாதிப்பிரிவினை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சில பள்ளிகளில் மாணவர்கள், சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை கட்டி, பிரிவினையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், சாதி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
