அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 53 வகையான பணிகளை கூடுதலாக வழங்குவதால் அதையும் முடிக்க முடியாமல் பாடமும் நடத்த முடியாமல் திணறுகின்றனர்.
*தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப்பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன.
இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில்*
*1.ஆசிரியர், ஆசிரியரல்லாதவர் பணிப்பதிவேடு,*
*2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு,*
*3.கற்றல் விளைவுகள் பதிவேடு,*
*4.பாடத்திட்டம்,*
*5.மெல்ல கற்போர் பதிவேடு,*
*6.கணிதக் கருவிப்பெட்டி பயன்பாட்டுப் பதிவேடு,*
*7. புத்தகப் பூங்கொத்து பயன்பாட்டுப் பதிவேடு,*
*8.வாசிப்புத்திறன் பதிவேடு,*
*9.எளிய அறிவியல் சோதனைப் பதிவேடு,*
*10.பள்ளி கட்டமைப்புப் பதிவேடு,*
*11.மாணவர்கள் சுய வருகைப் பதிவேடு,*
*12.காலநிலை அட்டவணை,*
*13. ஆரோக்கிய சக்கரம்,*
*14.எழுத்துப்பயிற்சி நோட்டு,*
*15.வரைபட நோட்டு,*
*16.கட்டுரை நோட்டு,*
*17. தொலைக்காட்சி ஒளிபரப்பு பதிவேடு, திட்டப் பதிவேடு,*
*18.அறிவியல் ரெக்கார்டு நோட்டு உட்பட 53 வகை ஆவணங்களை தலைமையாசிரியர் தயாரித்து பராமரிக்க வேண்டியுள்ளது.*
*இதற்கு பெரும்பாலும் இடைநிலை ஆசிரியர்களே உதவுகின்றனர்.*
*இதுதவிர 1.கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) மாணவர்,*
*2.ஆசிரியர் விவரம், தேர்வு விவரம்,*
*3.நலத் திட்டங்கள்,*
*4.பொதுத் தேர்வு மையங்கள் விவரம் உட்பட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரிப்பதால் மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.*
*💲🛑💲இதுதவிர, 1.மக்கள் தொகை கணக்கெடுப்பு,*
*2.இலவசப் பொருட்கள் எடுத்து வருதல்,*
*3.எமிஸ் இணையதள பதிவேற்றம்,*
*4.சத்துணவு பராமரிப்பு,*
*5.பள்ளி விவரங்கள்* *மேம்பாடு,*
*6.விளையாட்டு போட்டிகள்,*
*7.விழாக்களுக்கு மாணவர்களை தயார் செய்வது,*
*8. கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றல்,*
*9.கல்வி உதவித்தொகை தேர்வுகளுக்கு தயார் செய்தல்,*
*10.‘க்யூ.ஆர்.’ கோடு பயன்பாடு என இதரப் பணிகளையும் கவனித்து ஆவணங்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.*
*💲🛑கல்விமுறையில் பாடத்திட்டம் மாற்றம் உட்பட சீர்திருத்தங்கள் செய்த பின்னர், ஆசிரியர்கள் கற்பித்தலைவிட 53 வகையான ஆவணங்களை தயார் செய்து பராமரிக்கவே நேரமின்றி தவிக்கின்றனர்.*
*💲🛑இதில் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கேற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்றைய ஆவணங்களை எப்படி முடிக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் ஓடுவதால், கவனச் சிதறலில் மாணவர்களுக்கு ஆசிரியர்களால் சரியாக பாடம் நடத்த முடியவில்லை.*
*💲🛑மாநிலத்தில் 70 சதவீத ஆரம்பப்பள்ளிகளில் ஈராசிரியர்களே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 2 பேர்தான் 1 முதல் 5 வரையான வகுப்புகளையும் கவனிக்க வேண்டும்.*
*💲🛑மொத்தமுள்ள 23 பாடங்களையும் நடத்த வேண்டும். இதில் ஆவணங்களையும் தயாரிப்பது பெரும் சவாலாக உள்ளதால் வாரத்தில் 2 நாட்கள் பாடம் நடத்தவே சிரமப்படுகின்றனர்.*
