இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

இதன்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் அடிப்படையில் 30ம் தேதி ‘ஆன்லைன்’ வழியில் இடமாறுதல் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த இடமாறுதலை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

Design a site like this with WordPress.com
Get started