தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது

உலகளவில் கல்விக்கென தமிழில் பிரத்யேகமாக தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு Unique World record விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

கல்விக்கென பிரத்யேக தமிழ் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற உள்ளன.

உலகளவில் 31 கல்வி தொலைக்காட்சிகள் பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தமிழில் முதன்முறையாக இந்த கல்வித் தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

இதற்காக உலக சாதனைகளை அங்கீகரிக்கும் Unique World Record என்ற அமைப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருதினை கொடுத்துள்ளது.

இந்த விருதையும், இதற்கான சான்றிதழையும் Unique World Record அமைப்பின் தமிழக பிரதிநிதிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

Design a site like this with WordPress.com
Get started