ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி

கடந்த 2018 நவம்பரில் 11,999 ரூபாய்க்கு அறிமுகமான ஹானர் 8C தற்போது 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது.

ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மாத இறுதி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்டில் சிறப்பு விலைத் தள்ளுபடி மட்டுமல்லாது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது.

ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் ரெட்மி நோட் 7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் மோட்ரோலா ஒன் விஷன் ஆகிய ஃபோன்களுக்கு நல்ல விலைச் சலுகை கொடுக்கப்படுகிறது.

சில குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்ஃபோன் தள்ளுபடி விற்பனைப் பட்டியலில் ரெட்மி Y2 ஃபோனுக்கு 2,500 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தற்போது ஃப்ளிப்கார்டில் மட்டும் இந்த மொபைல் 7,499 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

இதேபோல், ஹானர் 8C ஸ்மார்ட்ஃபோனுக்கு 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 நவம்பரில் 11,999 ரூபாய்க்கு அறிமுகமான ஹானர் 8C தற்போது 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. சாம்சங் கேலக்ஸி A50, ஓப்போ F9 ப்ரோ, நோக்கியா 6.1 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

Design a site like this with WordPress.com
Get started