தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!

கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ரா.செல்வக்கண்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் பெற்றுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற செல்வக்கண்ணன், 2005ஆம் ஆண்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை, டிஜிட்டல் மல்டி மீடியா வகுப்பறை என அரசுப் பள்ளியை தரம் உயர்த்தியுள்ளார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.

Design a site like this with WordPress.com
Get started