அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி தான்யா தஸ்னீம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு செல்லவுள்ளார்.
மதுரையில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி தான்யா தஸ்னீம். இவர் அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான Go4Guru என்ற கல்வி நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வில் கலந்து கொண்டார்.
இதில் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டித் தேர்வில் பங்கேற்ற தஸ்னீம் வெற்றி பெற்று நாசாவுக்கு செல்ல தகுதி பெற்றுள்ளார்.
