ஏடிஎம் பண பரிவர்த்தனையை படிப்படியாக மொபைலுக்கு கொண்டுவர முடிவு

கனரா வங்கி ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்தால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பி, அதை திருப்பி பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் கனரா ஏடிஎம்-ல் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளருக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்க வேண்டும் எனவும் விரைவில் இது அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஸ்டேட் பாங்கியில் ஏடிஎம் மூலமான பணப்பரிவர்த்தனைகளை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வந்து, மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் அனைத்து பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது, சிறு குறு தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்குவது, பணமில்லா பரிவர்த்தனையில் பாதுகாப்பு குறைபாடுகளை களைதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஐஓபி வங்கி நிர்வாக அதிகாரி சுவாமி நாதன் தெரிவித்தார்.

Design a site like this with WordPress.com
Get started