கருத்தாய்வு மையைம் ( CRC ) – தமிழக அரசுக்கு “ஆசிரியர் குரல்” வேண்டுகோள்..!!

தமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள்! தமிழக முதலமைச்சர் அவர்களே !கல்வித்துறை அமைச்சர் அவர்களே! கல்வித்துறை செயலர் அவர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம் .வாழ்த்துக்கள் கல்வித்துறையில் ஒரு மிகப்பெரிய மலர்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டுவர தாங்கள் பாடுபடுவது நாங்கள் ஆவலோடு வரவேற்கிறோம் தங்களது முயற்சிகள் வெற்றி அடைந்து தமிழகம் இந்தியாவிலேயே கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக மாற எங்கள் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த வாரம் மேல்நிலைப் பள்ளிகளை கருத்தாய்வு மையங்களாக மாற்றி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருத்தாய்வு மையContinueContinue reading “கருத்தாய்வு மையைம் ( CRC ) – தமிழக அரசுக்கு “ஆசிரியர் குரல்” வேண்டுகோள்..!!”

CPS – Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு

தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும் Click here CPS MISSING CREDITS LINK

பிறந்த தேதியை சரிபார்க்க பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்: பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு

மத்திய பள்ளிக் கல்வி வாரிய பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் நாமினல்ரோல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் போது பெற்றோர் கவனிக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் பொதுத் தேர்வு எழுத உள்ள ஒவ்வொரு மாணவர்களின் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னதாக அந்த விண்ணப்பத்தில்ContinueContinue reading “பிறந்த தேதியை சரிபார்க்க பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்: பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு”

காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்

காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்’ என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில், வினாத்தாள் எப்படி இருக்கும் என, தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பும். ஆனால், இந்த ஆண்டு, வினாத்தாள் எப்படி இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.இந்நிலையில், வினாத்தாள் முறை குறித்து, தேர்வு துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையிலேயே,ContinueContinue reading “காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்”

மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனிமேல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அட்டையில் மாணவரின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, போன்றவை பெற்றோர் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக பெரும் குவியலாக அட்டைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையை மாற்ற பெற்றோரின் இமெயிலுக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பிவைக்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவையை வழங்கக் கூடிய நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுContinueContinue reading “மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்”

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது

உலகளவில் கல்விக்கென தமிழில் பிரத்யேகமாக தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு Unique World record விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்விக்கென பிரத்யேக தமிழ் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற உள்ளன. உலகளவில் 31 கல்வி தொலைக்காட்சிகள் பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தமிழில் முதன்முறையாக இந்த கல்வித் தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக உலக சாதனைகளை அங்கீகரிக்கும்ContinueContinue reading “தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது”

4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்காக 4 பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பயிற்சிக்காக சிறப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 281 பள்ளிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையில் 12ContinueContinue reading “4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்”

பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

*🔵⚪தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.* *சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு*

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்

:கடந்த, 2018 – 19ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வருவாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கட்டாயம்வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஓராண்டுக்கு முன் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி, 2018 – 19க்கான,ContinueContinue reading “வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்”

ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்

பீகார் மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகாலம் ஒரே சமயத்தில் 3 அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளார். பீகார் மாநிலம் கிருஷணகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர் அம்மாநிலத்தில் உள்ள பொது பணித்துறை யில் உதவி செயற்பொறியாளர், பங்கா மாவட்டத்தில் நீர் மேலாண்மைத்துறையில் அரசு அதிகாரி, பீம் நகர் பகுதியில் நீர் மேலாண்மை துறை அரசு அதிகாரி என மூன்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். கூடவே பணி உயர்வும் பெற்று வந்துள்ளார். கடந்தசிலContinueContinue reading “ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்”

கற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் வகுப்பறை நிகழ்வுகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் – RTI

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்

ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர்கள் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள், ஆகஸ்ட், 20ல் வெளியிடப்பட்டன. முதல் தாளை, 1.62 லட்சம் பேர் எழுதியதில், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம்ContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்”

ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்

தமிழகத்தில் ஒரே வளாகத்திலும் அருகருகேயும் தனித்தனியாகவும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகள்ContinueContinue reading “ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்”

அரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள்

பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் கணக்கில் இருந்து பணம் சுரண்டும் ‘ேஹக்கர்கள்’ குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வங்கி பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு செயலிகள் புதிது, புதிதாக பிறக்கின்றன. ‘பிம், கூகுள் பே, போன்பே, பேடிஎம்., ரேசர் பே, மொபிகுவிக், பாக்கெட்ஸ், ஹாட்பார்ம்’ உள்ளிட்ட செயலிகள் இவற்றில் சில. இந்த செயலிகள் மூலம் ஆன்லைன் வழியில் நொடியில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சமீப காலமாக சில செயலிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்கிலிருந்து பொருட்கள் வாங்கியதாக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.ContinueContinue reading “அரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீசில் குவியும் புகார்கள்”

தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை

தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், தற்போதைய நிலவரப்படி, உபரி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 2018, ஆக., 1 நிலவரப்படி, மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப, உபரி மற்றும் பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டன. அதற்கான பணிநிரவல், கடந்த மாதம் நடக்கவிருந்த நிலையில், வேலூர் தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, பணிநிரவல் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், மீண்டும் தற்போதைய நிலவரப்படி, கூடுதல் பணியிடங்கள் தேவைப்படும் பள்ளிகள், ஆசிரியர் பணியிடம்ContinueContinue reading “தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை”

epayroll இணையதளத்தில் e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு

கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த விபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம். Click here epay slip

3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை” – மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்

கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி ஒரு சில நடத்துநர்கள், சீருடை அணிந்த மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. ஒரு சில நடத்துனர்களின் செயலால் மாணவர்கள்ContinueContinue reading “3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை” – மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்”

கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

*கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா 26/08/2019 திங்கட்கிழமை* மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வில் இருந்து விலக்களித்து உயர்நிலைப் பள்ளி களில் பணியமர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல்ContinueContinue reading “ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்”

மூன்று கல்வி மாவட்டத்தில் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பு

சிவகங்கை : மாவட்டத்தில் கல்வித்துறை முடிவுபடி அரசு உயர், மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன .மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களின் கீழ் ஆயிரத்து 116 தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில், அரசு உயர், மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள்ளேயே தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. இப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அரசு முடிவு செய்தது.அந்தContinueContinue reading “மூன்று கல்வி மாவட்டத்தில் 27 தொடக்க, நடுநிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பு”

வரலாற்றை தேடி அரசு பள்ளி மாணவர்கள் கல்வி நடைப்பயணம்

வரலாற்றை தேடி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரிட்டாபட்டி மலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. தூரம் நடைப்பயணமாக வந்தனர். மேலூர் அருகில் உள்ள தெற்குதெரு அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 69 பேர் நமது பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்டைய காலத்தை பற்றி அறிந்து கொள்வதாக கல்வி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக தெற்குதெருவில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரிட்டாபட்டியை தேர்வு செய்தனர். இந்தContinueContinue reading “வரலாற்றை தேடி அரசு பள்ளி மாணவர்கள் கல்வி நடைப்பயணம்”

ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணை

ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை பெற ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத நாட்களுக்கு விடுமுறையை விண்ணப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறலாம் என்று மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு வராமல் போராடிய ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது

பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: செப். 1 முதல் 15 நாள்களுக்கு நடத்த மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் சுகாதாரம் குறித்து செப்.1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின், தூய்மையான நிகழ்வுகள் திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும் செப்.1-ஆம் தேதி முதல், 15-ஆம் தேதி வரை நடத்த வேண்டும். இதில், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில், உடைந்தContinueContinue reading “பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: செப். 1 முதல் 15 நாள்களுக்கு நடத்த மத்திய அரசு உத்தரவு”

Design a site like this with WordPress.com
Get started