கல்வி தொலைக்காட்சி தொடக்க விழாவை பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டியை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்

*வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது* *கல்வித்துறைக்கென்று பிரத்யேகமாக* *உருவாக்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியினைத்(200) தொடங்கிவைக்க இருக்கிறார். அந்நிகழ்ச்சியினை மாணவர்கள்* *அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக தங்கள் பள்ளிகளில் தொலைக்காட்சிப்* *பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு* *அறிவுறுத்தப்படுகிறார்கள்.தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் மாற்று ஏற்பாடாக* *Desk top computer,அல்லது மடிக்கணிணி* *வாயிலாகவாவது மாணவர்கள் காணும் வசதியினை ஏற்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்* *கொள்கிறோம். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆணையின்படி*

தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் கே.எம். நிட்வேர் குழுமத் தலைவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான கே.எம்.சுப்பிரமணியம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் கல்வித் துறைக்கு அரசு அதிகContinueContinue reading “தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்”

நெட்’ தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு

உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி உதவி தொகை பெறுவதற்கான, நான்கு விதமான, ‘நெட்’ தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.முதுநிலை பட்டதாரிகள், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், நெட் அல்லது மாநில அரசின், ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும், எந்த பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும், பணிக்கு சேரலாம். இதன்படி, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும், நெட் தேர்வை, இரண்டுContinueContinue reading “நெட்’ தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு”

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, ‘டெட்’ தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது. முதல் தாளை பொருத்தவரை, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, டிப்ளமா கல்வியியல் முடித்தவர் முதல், பி.எட்., முடித்தவர் வரை, தேர்வில் பங்கேற்கContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு”

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் அடிப்படையில் 30ம் தேதி ‘ஆன்லைன்’ வழியில் இடமாறுதல் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர்ContinueContinue reading “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல்”

TNTET 2019 Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில், 2011ல், ‘டெட்’ என்ற ஆசிரியர் தகுதிதேர்வு முறை அறிமுகமானது. டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது.பின், இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும்,ContinueContinue reading “TNTET 2019 Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்”

TNTP LOGIN -பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அறிந்துகொள்ள EMIS யில் USERS REPORT UPDATE செய்யபட்டுள்ளது

TNTP LOGIN USERS REPORT TNTP இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அறிந்துகொள்ள பயன்படுத்துவோர் ரிப்போர்ட் அப்டேட் செய்து உள்ளனர் நாம் அனைவரும் TNTP இணையதளத்தில் உள்நுழையவும் பயன்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் click the link and see this video

இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பள்ளிக் கல்வி – தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

குமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு “கனவு ஆசிரியர்களின் கூடல் விழா”

தமிழகம் முழுவதும் தங்களுடைய கற்பித்தல் பணிகளால் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை *கனவுஆசிரியர்கள்* என்னும் தலைப்பில் *குமுதம்சிநேகிதி இதழ்* அடையாளப்படுத்தி தொடர்ந்து சிறப்பித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இதுவரை கனவு ஆசிரியர்கள் தொடரில் இடம்பெற்ற ஆசிரியர்களை அவர்களது குடும்பத்துடன் இணைத்து அங்கீகரிக்கும் மேடையை வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னெடுப்பு செய்கின்றது *கல்வியாளர்கள்சங்கமம்* இச்சிறப்புமிகு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க, சமூகமுன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கி்ன்றேன்

6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும்.ContinueContinue reading “6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்”

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை…

தலைமையாசிரியராக பணியேற்ற நாள் முதல் இன்று வரை. பள்ளிக்கு முதலில் சென்று கடைசியில் வந்தோம். நலத்திட்டங்களுக்காக நாள்தோறும் சாக்கு தூக்கினோம். மூன்று பருவமும் மூட்டைத்தூக்கும் முதலாளியாய் வலம் வந்தோம். எமிஸ் ஆதாருக்காக எத்தனையோ இரவுகள் விழித்திருந்தோம். கட்டிட வசதிக்காக கைக்காசை செலவு செய்தோம் கண்மூடி கழிப்பறை சுத்தம் செய்தோம். ஆண்டுவிழாகொண்டாட ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை சந்தித்தோம். smc கூட்டம் போட எத்தனையோ கஷ்டங்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழா. ஓய்வில்லாமல் போட்டிகள். சத்துணவு மேற்பார்வை சக ஆசிரியர் மேற்பார்வைContinueContinue reading “தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை…”

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேராத ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட உரிய அறிவுரைகள் சார்ந்த CEO செயல்முறைகள்

பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க பரிந்துரை – சென்னை பல்கலைக்கழகம்

பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேரிடர் காலங்களில் மாணவர்கள் உளவியல் ரீதியாக அதிக பாதிப்பு அடைவதாகவும், அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில்ContinueContinue reading “பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க பரிந்துரை – சென்னை பல்கலைக்கழகம்”

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான ஆசிரியர்களில் சில நூறு பேர் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர் என்றும், இது வேதனையளிப்பதாகவும் கூறினார். மேலும் இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வித்தரத்தையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரத்தையும மேம்படுத்துவது அரசின் கடமைContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது”

ஆசிரியர்களிடமும் அரசு ஊழியர்களிடமும் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கீழ் அரசு செலுத்தும் வட்டிக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை

2019 – 2020-ம் ஆண்டுக்கான (NEET) மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். 2019 – 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டு உள்ளது

கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் தொடங்கியது.

பள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாமல்லபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முகாமைத் தொடங்கி வைத்தனர். மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ்ContinueContinue reading “கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் தொடங்கியது.”

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் 2019 – 2020ஆம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு 01.01.2019 -னை மைய நாளாக கொண்டு தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரம் பெறப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கு எண். W.p.no. 16570 and 22145 of 2014 , நாள் 22/12/2017-ல் பெறப்பட்ட இடைக்கால தீப்பின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தெரிவுப் பட்டியல் வெளியீடு. CLICK HERE TO SGTContinueContinue reading “நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.”

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஆக.21) நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அம்மனுவில், “பொதுமக்கள், மாணவர் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால் அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை கடந்த 30-01-2019 அன்றே கைவிட்டு பணியேற்கச் சென்ற நிலையில், ஆசிரியர்கள், அரசுContinueContinue reading “ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு”

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு :தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் நவ. 3ல் நடக்கவுள்ள மாநில அளவிலான முதல் கட்ட தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப். 7 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயைContinueContinue reading “தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்”

பங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு

தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களிடம், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.9 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே இருந்ததை விட, 0.1 சதவீதம் வட்டி குறைவு. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்

தொடக்கப் பள்ளிகளில், குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி, பாடம் நடத்தலாம்  

மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம்’ என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை .தொடக்கப் பள்ளிகளில், மூத்த ஆசிரியர்கள், அனுபவ அடிப்படையில், தலைமை ஆசிரியர் பொறுப்பில்ContinueContinue reading “தொடக்கப் பள்ளிகளில், குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி, பாடம் நடத்தலாம்  “

Design a site like this with WordPress.com
Get started