ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டார்.

7 நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அங்கு கையாளப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சரையும் சந்தித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் அந்நாட்டிற்கான இந்திய தூதர் வாணி ராவ், உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்

Design a site like this with WordPress.com
Get started