*இன்றைய தொடக்கக்கல்வி துறையும் அதன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையும் கேட்பாரற்ற நிலையில் கேள்விக்குறியுடன் திகழ காரணம் என்ன? மனசாட்சியுடன் ஓர் அலசல்!*
*1.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப புற்றீசல் உருவான நமது சங்கங்களும் அதன் ஒற்றுமையின்மையும்….*
*2.ஒய்வு பெற்றும் பதவி துறக்க மனமில்லா சங்க தலைவர்களும் மூத்தோர்களும் இன்றைய கால சூழலை உணரமுடியாததால் தேவையற்ற கோரிக்கையை முன்வைத்து பின்வாங்குவது…*
*3.போராடக்களத்தில் இறுதிவரை அதாவது கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை ஈடுபட முடியாமல் சில சங்கங்கள் பின்வாங்கி போராட்டத்தை சீர்குலைத்து நீர்த்துபோக செய்வது…..*
*4.சுயநல நோக்கத்திற்காக அதாவது ஒரு கோரிக்கைக்காக சாத்தியமில்லாத பல கோரிக்கைகளை முன்வைப்பதும் மூத்தோர் இளையோர் என்ற பாகுபாடு பார்ப்பதும்….*
*5.அரசுடனான பேச்சுவார்த்தையின் உன்மைநிலையின் வெளிப்படைத்தன்மையில்லாமலும் சக உறுப்பினர்களுக்கு கூட தெரிவிக்காமல் மூடி மறைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குவது…*
*6.சிலசங்கங்கள் போராடினால் மீதமுள்ள சங்கங்கள் பின்வாங்குவதும் ஒருசங்கம் எதிர்த்தால் மறு சங்கம் ஆதரிப்பது அரசுக்கு சாதகமான அமைத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்வது…..*
*7.முதியோர்களும் மூத்தோர்களும் சங்கத்தலைமையை தூக்கி எறிந்துவிட்டு பொதுநல நோக்கம் கொண்ட இன்றைய சூழலில் உள்ள இன்னல்களை அனுபவிக்கின்றவர் தலைமையேற்று உண்மைதன்மையுடன் நியாயமான அவசரகால கோரிக்கையான தொடக்கக்கல்வித்துறையின் அழிவை மீட்கும் விதமாக ஒற்றைகோரிக்கையை கையிலெடுத்தால் தொடக்ககல்வித்துறையை மீட்கலாம்….*
*8.ஆக மொத்தத்தில் நமது அமைப்புகளான “ஜாக்டோ-ஜியோ மற்றும் கிராப்” என்ற பிரிவினையால் நமக்குநாமே சூன்யம் வைத்துக்கொன்டோம் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது……*
*9.கடந்த போராட்ட காலத்தில் எட்டுநாட்களுக்காக பல ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்க முடியவில்லை. அடுத்து எட்டுநாட்கள் ஊதியம் மட்டுமா இழந்தோம்….. நம் தன்மானத்தையும் இழந்தோம். “அதைவிட முக்கியமாக போராட்டத்தில் கலந்து கொண்ட திறமையான ஆசிரியர்கள் கூட நல்லாசிரியர் விருது பெற முடியவில்லை”.*
*10.போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்காத நம் அனைத்து சங்க, இயக்க தலைமைகளா தற்போதைய அரசு பழிவாங்கும் சூழலை தடுக்கப்போகின்றது.*
*தன்மானமுள்ள அனைத்து தலைமைக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!. தங்களின் “”ஈகோ”” என்கின்ற சுயநலத்தையும் விடாப்பிடியையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரே அமைப்பாக ஒரே தலைமையின் கீழ் ஒரே குடையின் கீழ் அனைவரும் கைகோர்த்து அரசின் இன்றைய பழிவாங்கும் போக்கை கைவிட வலியுறுத்தி ஒரே கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையை நாம் உருவாக்கினால் மட்டுமே அரசு நம்மில் திணிக்க உள்ள அழுத்தத்தையும் பழிவாங்கும் நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தவும் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது…*
*_ரஷீத்_*
*விழுப்புரம் மாவட்டம்.*
