சீனாவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
ஹூபே மாகாணத்தில் என்ஷி நகரத்துக்கு அருகே உள்ள சாயாங்போ கிராமத்தில் விடுமுறை முடிந்து முதல் நாள் வகுப்பிற்காக குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணியளவில் 40 வயதுமிக்க நபர், பள்ளி மாணவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். இதில் 8 குழந்தைகள் உயிரிழந்தநிலையில் மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விசாரண நடத்தி வருகின்றனர்.
யூ குடும்ப பெயர் கொண்ட அந்த நபர், கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜுன் மாதம் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் எவ்வாறு தாக்கப்பட்டனர், எதற்காக தாக்கப்பட்டனர் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் வடமேற்கு ஷாங்க்சி மாகாணத்தில் நடுநிலைப்பள்ளிக்கு வெளியே 9 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காயில் தொடக்கப்பள்ளிக்கு வெளியே 2 குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
