விட்டமின் D கிடைக்கும் வகையில் பள்ளி மாணவர்களை திறந்தவெளிகளிலும், மைதானங்களிலும் ஓய்வு நேரத்தில் விளையாட ஊக்குவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதுடன், செல்போன் மற்றும் கணிணி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் விளையாட்டில் கவனம் செலுத்தாததால் விட்டமின் டி உள்ளிட்ட சத்து குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாட வேளையின் போது விளையாட்டின் அவசியம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஓய்வு நேரத்தில், சூரிய ஒளி படும் வகையில், திறந்த வெளிகளிலும், மைதானங்களிலும் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடச் செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது
