Jio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..?

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் Jio GigaFiber திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. Jio GigaFiber திட்டத்துடன் ஒரு டெலிஃபோன் சேவை, ஒரு கேமிங் செட் டாப் பாக்ஸ், ஒரு இலவச 4 கே டிவி மற்றும் ஜியோ இண்டர் நெட் அஃப் திங்க்ஸ் (IoT – Internet of Things) என்று சொல்லப்படும் சேவை வழங்கப்பட இருக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று நம் முகேஷ் அம்பானி 42-வது ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவித்த போதில் இருந்தே எதிர்பார்ப்புகள் பலமாக அதிகரித்தக் கொண்டு இருக்கின்றன.

இப்போது Jio GigaFiber திட்டத்தில் சேர்ந்து கொள்வதில் கூட சில இணைய திருடர்கள் உள்ளே புகுந்து வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் திருடி விடுவதாகச் செய்திகள் வந்து கொண்டு இருkகின்றன.

ஆக இந்த பிரச்னைகளில் எல்லாம் சிக்காமல் Jio GigaFiber திட்டத்தில் எப்படி இணையலாம்.

ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு https://gigafiber.jio.com/registrationஎன்கிற வலைதளத்தில் முதலில் கூகுள் மேப்பில் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சரியாக உங்கள் விலாசத்தைக் கொடுங்கள் அதன் பின், வழக்கம் போல உங்கள் முழு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகளைக் கொடுத்து ஓடிபியைப் பெறுங்கள்.

வரும் ஓடிபியை ஜியோ வலைதளத்தில் கொடுத்தால் போதும். மீண்டும் வீட்டு முகவரியை உறுதி செய்யச் சொல்கிறார்கள். இதை எல்லாம் செய்து முடித்தால், அவ்வளவு தான் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வந்த பின் நம்மை அலைத்து ஜியோ நிறுவனமே விவரங்களைச் சொல்வதாகச் சொல்கிறார்கள்.

ரொம்ப கஷ்டம் சிரமம் இந்த முகவரியை சரியாக கூகுள் மேப்ஸில் டேக் செய்து முடிப்பதற்குள் நமக்கு நான்கு வயது கூடி விடும் போலத் தான் இருக்கிறது. அவ்வளவு எளிதில் நம் வீட்டு விலாசத்தை, ஜியோ வலைதளத்தில் இருக்கும் கூகுள் மேப்சில் குறிப்பிட முடியவில்லை.

எனவே பொறுமையாக நேரம் இருக்கும் போது இந்த விவரங்களை நிரப்பவும். மிகவும் பொறுமையாக தேடிப் பிடித்து நிரப்ப வேண்டி இருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

.

Design a site like this with WordPress.com
Get started