தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க ஆசிரியர்கள் நூதன முயற்சி

மெக்ஸிகோவில் பள்ளித் தேர்வில் காப்பி அடிக்காமல் எழுதுவதற்காக ஆசிரியர்கள் எடுத்த முயற்சி விவாதப் பொருளாகி உள்ளது.

லேக்ஸ்கலா ((Tlaxcala)) என்ற இடத்தில் பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் தேர்வெழுதும் போது ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தடாலடியாக முடிவு ஒன்றை எடுத்தது. அதன்படி தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் அட்டைப் பெட்டியால் மூடியிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாங்காக்கில் இதேபோன்று தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க, இருபுறமும் வெள்ளைத் தாளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Design a site like this with WordPress.com
Get started