ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பணியில் முத்திரையைப் பதித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி பல்வேறு கல்லூரிகளில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
இதனிடையே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது. அனிமேஷன் வகையிலான இந்த டூடுளில் ஆசிரியர்களின் பணியினை குறிக்கும் வகையில் சிவப்பு நிற ஆக்டோபஸ் ஒன்று பாடம் எடுப்பது, கரும் பலகையில் கணக்கிடுவது, அறிவியல் சோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அதனை மாணவர்களான மீன்கள் கவனிப்பது போன்று டூடுள் உருவாக்கப்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started