பள்ளிகளுக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 250 கிலோமீட்டர் நீளத்துக்கு 144 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளுக்காக 144 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்க ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர்கள் கட்டுவதன் மூலம் பள்ளிகளுக்குள் அன்னியர் நுழைவதை தடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் படிப்பை தொடர வழி வகுக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Design a site like this with WordPress.com
Get started