90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் – அமைச்சர் செங்கோட்டையன்

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்களால், நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என கவலை தெரிவித்தார்.

ஆதலால் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அறைகளில் தற்போது கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், பிற வகுப்பறைகளில் கேமரா பொருத்த நிதி தேவைப்படுவதால், அதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Design a site like this with WordPress.com
Get started