தனது திருமணத்தை முன்னிட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியை செய்த காரியத்தை பாருங்கள்..

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவில் நலத்திட்டங்களை வழங்கி அசத்தியுள்ளார்.

கோழியாலம் அரசு ஆரம்பப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் விக்னேஷ்வரன் என்பவருக்கு ஞாயிற்றுக்கிழமை காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்தை முன்னிட்டு தாம் பணிபுரியும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விக்னேஷ்வரனுக்குத் தோன்றியுள்ளது.

இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிக்கான இரும்பு கேட் அமைத்து, ஒரு பகுதி இடிந்து விழுந்திருந்த சுற்றுச்சுவரை சரி செய்து, சுவர்களில் தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார் விக்னேஷ்வரன்.

அத்துடன் நில்லாமல், 25 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கி, அவ்வூரிலுள்ள தன்னார்வ இளைஞர் அமைப்பிடம் வழங்கி, அவற்றை மரங்களற்ற பகுதியில் வீசுமாறு பணித்துள்ளார் விக்னேஷ்வரன்.

பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ள விக்னேஷ்வரனின் இந்த செயல், சக ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது

Design a site like this with WordPress.com
Get started