சி.பி.எஸ்.இ., 6ஆம் வகுப்பில், சமூக மற்றும் அரசியல் வாழ்வு எனும் புத்தகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் நடந்த தேர்வில் சரியான விடையை தேர்வு செய் என்ற பகுதியில், இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதில், தலித்துகள் யார்” என்கிற கேள்விக்கு, தீண்டத்தகாதவர்” என்ற பதிலும், இஸ்லாமியர்களின் வழக்கமான குணம்” என்ன ?என்பதற்கு, பெண் பிள்ளைகளை, பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்” என்ற பதிலும் தரப்பட்டுள்ளது.
இந்த இரு கேள்விகள் மற்றும் பதில்கள், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. பாடத்திட்டத்தில் உள்ள இந்த கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
