தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுக்கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது
.மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு திட்டத்தில் கடந்த 2019-20ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெற்ற மாணவ மாணவியரிடம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றுதல் தொடர்பான ஆய்வு கூட்டம், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தி–்ல 2019-20ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதியதாக விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டும். இந்த கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களையும் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் 2019-20ம் கல்வியாண்டில் தகுதி பெற்ற 6695 மாணவர்களில் 5.9.2019 நாள் நிலவரப்படி 18 மாவட்டங்களில் இருந்து 357 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதர மாவட்டங்கள் பணியை இதுவரை தொடங்கவில்லை. மேலும் புதுப்பித்தல் பணிகளும் குறைந்த அளவில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
