பத்து முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, பருவ தேர்வுகளும், 10 முதல் பிளஸ் 2 வரை, மூன்று நிலைகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ தேர்வு, தனியார் பள்ளிகளில், நேற்று முன்தினம் துவங்கியது.
அரசு பள்ளிகளில், வரும், 12ம் தேதி துவங்க உள்ளது.இந்நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நாளை முதல் காலாண்டு தேர்வு துவங்க உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றுக்கு, ஒரே வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
