‘உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரமேஷ் தாக்கல் செய்த மனு:எம்.எஸ்சி., – எம்.பில்., மற்றும், பி.எட்., முடித்துள்ளேன். உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளேன்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,340 உதவி பேராசிரியர்கள் நேரடி தேர்வு நியமனத்திற்கு விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆக., 28ல் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம், 34 மதிப்பெண்ணில், நேர்முகத் தேர்விற்கு, 29 சதவீத மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.பல்கலை மானியக்குழுவின் அறிவிப்பை பின்பற்றி, போட்டித் தேர்வு நடத்தி, தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.விசாரணையை, நீதிபதி, வி.எம். வேலுமணி ஒத்திவைத்தார்.
