நாமக்கல் மாவட்டம் உடுப்பம் தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணன் மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பள்ளியில் தகாத உறவு வைத்ததாக கூறி, 10க்கும் மேற்பட்டோர் பள்ளியில் புகுந்தது ஆசிரியர் சரவணை சரமாரியதாக தாக்கினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன், தன் மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரத்தை வைத்து 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ள்ளார்.
இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த புதுசத்திரம் வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணனுக்கு, நாமக்கல் மாவட்ட கல்வி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உத்தரவின் படி, பள்ளிக்கு இன்று செல்லவிருக்கும் கோபாலகிருஷ்ணன் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.
இந்நிலையில் அவர் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
