16 அரசு கலை – அறிவியல் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்

16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2-ம் நிலை முதல்வர்களாக பணியாற்றி வந்த அவர்களுக்கு முதல் நிலை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த கே.மீனாவுக்கு திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற 15 பேர் முதல் நிலை அரசுக்கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர். 16 பேரும், உடனே புதிய இடத்தில் பணியில் சேர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பணியாற்றி வந்த இடங்களில் இருந்து விடுவித்து புதிய இடங்களில் பணியில் சேருவதற்கான அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Design a site like this with WordPress.com
Get started