புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது – மங்கத் ராம் சர்மா

உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஏஐசிடிஇ தலைவர் அனில் தட்டார்யா சாஷ்ரபுத்தே மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் வளர்ச்சி விழுக்காடு 48 புள்ளி 6 சதவீதமாக இருப்பதாகவும், இந்த விழுக்காட்டை அடுத்த இரு ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் institute of eminence என்ற உயரிய அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரம் என கூறிய அவர், அந்த அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தேவையான முயற்சிகளை தமிழக உயர்கல்வித்துறை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

இதுதொடர்பான கோப்புகளும் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என மங்கத் ராம் சர்மா தெரிவித்தார். IOE அந்தஸ்து பெறுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவில்லை என கூறும் செய்திகள் தவறானவை என குறிப்பிட்ட அவர், அண்ணா பல்கலைக்கழகம் IOE அந்தஸ்தை பெறுவதற்கு, தமிழகத்தினுடைய நிதிப் பங்கீடு தொகை எவ்வளவாக இருந்தாலும் அதை கொடுக்க முனைப்பு காட்டி வருவதாக கூறினார்

Design a site like this with WordPress.com
Get started