இரண்டாம் பருவ பாடநூல் வந்தது

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான 2-ம் பருவத்திற்கான 23 ஆயிரத்து 621 பாட குறிப்பேடுகள் நேற்று லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தது.

இதைத்தொடர்ந்து தொழிலாளிகள் லாரியில் இருந்து பாட குறிப்பேடுகளை இறக்கி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைத்து உள்ளனர்.

இந்த பாட குறிப்பேடுகள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளதாக கல்விததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Design a site like this with WordPress.com
Get started