பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், விடுமுறையில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடந்துவருகிறது. வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காலாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்லும் நிலை உண்டாகியுள்ளது.
மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், வெளியூர் மற்றும் சுற்றுலா திட்டம் வைத்திருந்த பெற்றோர்கள், அரசின் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்