வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம்

பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்த பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பீகாரில் கங்கை நதியில் கடந்த சில நாள்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் கதிகார் எனுமிடத்தில் கங்கை நதியின் வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கரையோரம் அமைந்திருந்த பள்ளிக்கூட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அடித்து செல்லப்பட்டது. அந்த விடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பள்ளிக் கட்டிடம் சிறிது சிறிதாக இடிந்து அடியோடு சாய்ந்து கங்கை நதியில் அடித்து செல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக அந்த பள்ளியில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதனால் அசம்பாவிதம் நேரிடாமல் தவிர்க்கப்பட்டது.

Design a site like this with WordPress.com
Get started