சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலில், பல குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலில், பல குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையத்தில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான தையல் மற்றும் இசைப்பிரிவு ஆசிரியர்கள் நியமனத்திற்கான முதல் பட்டியலில் இடம் பிடித்த 14 பேரின் பெயர், இரண்டாவது பட்டியலில் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், 6 பேர் புதிதாக தேர்வு பட்டியலில் இடம் பிடித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.

இசை மற்றும் தையல் பிரிவு ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலில் பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, உரிய விளக்கம் பெற மாநில மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Design a site like this with WordPress.com
Get started