மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கான நேர்காணலை பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்காக 21 பேர் விண்ணப்பித்திருந்ததாகக் கூறியிருந்தார்.

அவர்களுக்கு வரும் 23ம் தேதி நேர்காணல் நடக்க இருந்தாகக் குறிப்பிட்ட அவர், 7 பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் குழு முன்பாக இந்த நேர்காணல் நடத்தப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மைக்காகவே நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நேர்காணலுக்குப் பின்னர் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் ஒருவரை சிண்டிகேட் குழுவினர் தேர்வு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Design a site like this with WordPress.com
Get started