♦💲♦முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத உள்ளவர்கள், ஆன்லைன் வாயிலாக, கணினி பயிற்சி மேற்கொள்ளும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது
♦💲♦தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவியில், 2,144 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
♦💲♦இதற்கான போட்டி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, வரும், 27, 28 மற்றும், 29ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வை, 154 மையங்களில், 1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர்
♦♦தேர்வு எழுதுவோருக்கு, முக்கிய அறிவிப்பு ஒன்றை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
♦♦அதாவது, இந்த போட்டி தேர்வு, கணினி வாயிலாக நடக்க உள்ளது. அதனால், தேர்வின் தன்மைகளை தெரியும் வகையில், கணினி வழி மாதிரி தேர்வுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது
♦♦தேர்வர்கள், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண்ணை பயன்படுத்தி, மாதிரி கணினி வழி தேர்வில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். தேர்வு குறித்து புரிந்து கொள்ள பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
