கனமழையால் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை : அச்சத்துடன் காலாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசுப்பள்ளிக்கட்டிடம் அறை இடிந்து விழுந்ததால், மாணவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

சிறுமூர் என்ற கிராமத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் மேற்கூரை நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை காலாண்டு தேர்வு எழுத வந்த மாணவர்கள், கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில், தேர்வெழுதினர். பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என, பல முறை கேட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

Design a site like this with WordPress.com
Get started