பணியிடை நீக்கம் – ஆசிரியர் தற்கொலை முயற்சி

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், பள்ளியிலேயே ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், வாசுதேவன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2 மாதமாக பள்ளி நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்த நிலையில், வாசுதேவனுக்கு சஸ்பெண்டு உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்து வாசுதேவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே, சக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 


இதற்கிடையே, வாசுதேவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரி மற்ற ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Design a site like this with WordPress.com
Get started